எமது மட்டக்களப்பின் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்பட்டுவரும் கண்ணகி வழிபாட்டு பாரம்பரிய நிகழ்வுகளின் அரிய ஒலி, ஒளி வடிவங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
கோடை மழை பெய்யவேண்டும், கொடும்பாவம் அகலவேண்டும், நாடி வரும் அடியவர்கள் துன்ப துயரம் அறவேண்டும். பாடி ஓடி ஆடி வரும் அடியவர்கள் தேடி தேடி கண்ட பொருள், உன்மை, அறம், ஒழுக்கம் என பல உன்மைகளை இந்த சடங்கு விழாக்களுக்குள் புதைத்து மக்களை ஒன்றுபடுத்தி, சகோதரத்துவம், ஒத்தாசை, விட்டுக்கொடுப்பு, விருந்தோம்பல், கொல்லாமை போன்ற நல்ல பண்புகளை புகட்டும் இந்த பண்பாட்டு மரபுகள் அன்று மட்டமல்ல இன்றும் நின்று நிலைப்பதை மீன் பாடும் தேனாட்டில் எங்கும் காணலாம்.
மின்னல் ஒளிபரப்ப சென்நெல் கதிர் இசைக்க
சோவெனத் தருக்கள் பூத்து சொரிந்து மணம் வீசிநிற்க்க
ஆவெல்லாம் பால் சொரிந்து அழும் பிள்ளை பசிதீர்க்க
தென்னகத்தே கண்ணகித்தாய் வண்ணமதாய் பிறக்கின்றாள்.
மதுரை மானகரம் மங்களமாய் அருள் பரப்ப
எதிரே நின்றபகை எல்லாம் ஒளிந்துவிட
உதிரும் புன்னகை உதட்டினில் ஜொலிக்க
உதித்தாள் பூம்புகார் மண்ணில் உத்தமி
தெய்வக் குழந்தையாய் உதித்த தேவி மானாக்கன்
கையில் மகளாய் மலர்ந்து நின்றாள்
வையகத்தே ஆயிரங்கண்ணாள் அம்பிகை வடிவில்
உய்யவைக்க வந்துதித்தாள் ஊரெல்லாம் நமக்காக
இந்த சடங்கு காலங்களில் கொண்டாடப்படும் அரிய காட்சிகளை ஒலி ஒளியமைப்பில் பதிவு செய்து உங்கள் கண்முன்னே கொண்டுவருகிறோம்.
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க!!
இலங்கை போன்ற சிறிய நாடுகளில்,தழிர்களின் அடையாளங்களை பறைகின்ற உயிர்நாடிகளாக இருப்பவை பட்டி தொட்டிகளில் புழுதி மண்டிக்கிடக்கும் இலக்கிய வடிவங்கள்தான்..காவியங்கள், சிந்து, காவடிப்பாடல்கள் போன்ற இலக்கிய வடிவங்கள் எத்தனை அழகு பொருந்தியது என்பதனை முறையாகப் பாடும் போதுதான் அது உணரப்படுகின்றது. அவை பாரம்பரியமாக செயல் வடிவுற்றதனால், அவை புதிய தலைமுறைக்கு கடத்தக்கூடிய இலகு தன்மை, புதிதுசேர்த்தல், நயம் இல்லாமல் போனதால், இப்போது அவை அழிவுறும் தறுவாயில் இருந்து வருகின்றது.
ஆனால் அவற்றை நாங்கள் அப்படியே விட்டுவிடுவோமா என்ன! புதிய முறையில், பழமை மாறாமல் இதுவெல்லாம் எங்கள் சொத்துக்களா என்று மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு அவை அழகு பொருந்தியதே என்பதை கலைஞர் இன்பராஜ் பாட நெறிப்படுத்தி, இப்போது அவை ஒலியில் பதித்து காற்று வெயியில் பரவவிட்டுள்ளோம்.
இங்கு செட்டிபாளயம் கண்ணகி காவியம், மட்டக்களப்புக்கு பொதுவான கண்ணகி காவியம் என்பன பாடி வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
சடங்குமுறைப் பாரம்பரியமும் தமிழும்
பக்தியோடு சடங்கு காலங்களில் எடுக்கும் காவடி வகைகளில் உணர்வுபூர்வமான காவடி-முள்காவடி
மட்டக்களப்பு வசந்தன் கூத்து
கண்ணகை அம்மன் சடங்கு காலங்களில் வாசிக்கப்படும் மட்டக்களப்பு பறை மட்டக்களப்பு தமிழர் கலைகள் பாரம்பரியமானவை, சுவையானவை அதை கேட்டு உணரும் போது அதில் ஒரு தனிச் சுகம் இருப்பதனை அறியலாம்.
சடங்குகால நிகழ்வுகளின் நிழல்கள்
இவற்றை மற்றவருக்கும் தெரியப்படுத்துங்கள், உங்களது அக்கபூர்வமான கருத்தை தெரிவியுங்கள்.
( மறக்காமல் உங்களது கருத்தை comment இல் தெரிவியுங்கள் & பேஷ்பூக்கில் பகிர்ந்துகொள்ளுங்கள் .. )

















