பட்டிருப்பு பாரம்பரியம் மிக்க தமிழ் பிரதேசம் -மீள்குடியேற்ற பிரதியமைச்சர்


(கிருஸ்ணா)

பட்டிருப்பு தொகுதியானது பாரம்பரிய மிக்க தமிழ் பிரதேசமாகும்.அவற்றினை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளை தாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லையென மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.


பட்டிருப்பு புளுடயமன்ட் விளையாட்டுக்கத்தின் விளையாட்டுப்போட்டியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பட்டிருப்பு வுளுடயமன் விளையாட்டுக்கழகத்தின் 27வது அகவையினை முன்னிட்டு நடாத்திய கலாசார விளையாட்டு விழாவும் இன்னிசை இரவும் இன்று வெகு விமர்சையாக இடம்பெற்றுவருகின்றது.

வுளுடயமன் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் ச.சிவதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் சுதாகர் உட்பட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பட்டிருப்பு பிரதேசத்தில் பல்வேறு நலத்திட்டகளையும் சமூகப்பணிகளையும் மேற்கொண்டுவரும் வுளுடயமன் விளையாட்டுக்கழம் சுமார் 27 வருடமாக சமூகத்துக்கு ஆற்றிவருகின்றது.

இதனைசிறப்பிக்கும் வகையில் பிரதேச மக்களின் உதவியுடன் இந்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டதுடன் இதில் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

குறிப்பாக இங்கு இடம்பெற்ற போட்டிகளில் அதிகளவான பெண்கள் பங்குபற்றியமை சிறப்பம்சமாகும்.

இதன் தொடர்ச்சியாக இன்று இரவு முதல் இன்னிசை இரவு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.