நல்லையா வித்தியாலயத்தில் அறுவடை விழா


(கிருஸ்ணா)

மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட பிள்ளையாரடி நல்லையா வித்தியாலயத்தில் வயல் அறுவடை விழா சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலை அதிபர் குணரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக மாவட்ட உதவி அரசாங்க அதிபர் வாமதேவன்,மட்டக்களப்பு கல்வி வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் சத்தியநாதன் மீள்குடியேற்ற அதிகாரசபையின் பணிப்பாளர் சத்தியவரதன்,உதவிக்கல்விப்பணிப்பாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

குhண்போரை கவர்ந்திழுக்கும் வகையில் பல்வேறு மரக்கறித்தோட்டங்கள்,தானிய வகைகள்,பழ மரங்கள் பாடசாலை தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ளன.

மகிந்த சிந்தனையின் மரத்தை நடுவோம் நாட்டை கட்டியெழுப்புவோம் திட்டத்தின் கீழ் இந்த தோட்டச்செய்கைக்கான உதவிகள் வழங்கப்பட்டன.

தமிழர்களின் பண்பாட்டினை வெளிக்கொணரும் வகையில் இந்த அறுவடை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.