மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வலய மட்ட விளையாட்டு விழா

(கிருஸ்ணா,மா.சசி)

மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயத்தின் வலய மட்ட விளையாட்டு விழா வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் நேற்று மகிழடித்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

புதிதாக உருவாக்கப்பட்ட கல்வி வலயத்தின் இரண்டாவது தடவையாக இந்த வலய விளையாட்டுப்போட்டிகள் இடம்பெற்றன.



அனைத்துப் போட்டிகளிலுமிருந்து 1 முதல் 13 ஆம் ஆண்டு வரையான பாடசாலை மட்டத்தில் 331 புள்ளிகளைப் பெற்று அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயம் முதலாமிடத்தையும் 217 புள்ளிகளைப் பெற்று கன்னன்குடா மகாவித்தியாலயம் இரண்டாமிடத்தையும் 149 புள்ளிகளைப் பெற்று நாவற்காடு நாமகள் வித்தியாலயம் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் ச.சந்திரகுமார் ஏற்பாட்டில்  இடம்பெற்ற இவ் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான குழு விளையாட்டுப் போட்டியில் கன்னன்குடா மகாவித்தியாலயம் 38 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தையும் முதலைக்குடா மகாவித்தியாலயம் 34 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும் அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயம் 32 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளதுடன் பெண்களுக்கான குழுப் போட்டியில் அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயம் 43 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தையும் கன்னன்குடா மகாவித்தியாலயம் 38 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும் முதலைக்குடா மகாவித்தியாலயம் 26 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளது.

1 முதல் 11ஆம் ஆண்டு வரையான பாடசாலை மட்டத்தில் கடுக்காமுனை வாணி வித்தியாலயம் 109 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தையும் காயன்குடா கண்ணகி வித்தியாலயம் 941 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தினையும் நாற்பதுவட்டை விபுலானந்தா வித்தியாலயம் 57 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தினையும் பெற்றுள்ளது.

1 முதல் 5 ஆம் ஆண்டு வரையான பாடசாலை மட்டத்தில் 15 புள்ளிகளைப் பெற்று நரிப்புல்லுத்தோட்டம் நடேஸ்வரா வித்தியாலயம் முதலாமிடத்தினையும் 10 புள்ளிகளைப் பெற்ற மாவிலையாறு கைலன் வித்தியாலயம் இரண்டாமிடத்திரனையும் 05 புள்ளிகளைப் பெற்ற நெல்லிக்காடு அ.த.க.பாடசாலை மூன்றாமிடத்தினையும் பெற்றுள்ளது.

இவ் விளையாட்டு விழாவில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஜனாப் நிசாம் கலந்துகொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் வெ.தவராஜா மண்முனை தென் மேற்குப் பிரதேச செயலாளர் திருமதி எஸ்.வில்வரத்தினம்,மட்டக்களப்பு கல்வி வலய கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டதுடன் கௌரவ விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகஸ்தர் ரி.ஈஸ்பரன் மற்றும் பிரிமா நிறுவனத்தின் பிராந்திய விற்பனை முகாமையாளர் ஏ.அருள்பிரகாசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.