மண்முனை மேற்கில் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினஆரம்ப நிகழ்வு

(ச.சுரேந்திக்கா)    
சர்வதேச புகைத்தல் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தின் ஆரம்ப நிகழ்வு மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் சமுர்த்தி சமூக அபிவிருத்திப் பிரிவினால் இன்று 31ம் திகதி  ஆரம்பித்துவைக்கப்பட்டது.


இந் நிகழ்வில் முதலாவது கொடியினை மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் வெ.தவராஜா அவர்களுக்கு வழங்கிவைத்து ஆரம்பிக்கப்பட்டது. இந் நிகழ்வின்போது சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் த.சத்தியசீலன், சமூக அபிவிருத்தி உதவியாளர் இ.சம்புலிங்கம் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இக் கொடிதின நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் சேகரிக்கப்படும் நிதிகள் அனைத்தும் இப் பிரதேச வறிய சிறுவர்களின் அபிவிருத்திக்காகவும், இப் பிரதேச அபிவிருத்திக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது.