சுற்றாடல் அதிகார சபையினால் முன்பள்ளிக் கல்விக்கான ஆசிரியர் அறிவுரை நூல் வெளியீடு!


(தீரன்)
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் முன்பள்ளிக் கல்விக்கான ஆசிரியர் அறிவுரை நூல் வெளியீட்டுவிழா அண்மையில் நடைபெற்றது.


மட்டக்களப்பு மாவட்ட சுற்றாடல் அதிகாரசபையினரால் மகஜனக் கல்லூரி மண்டபத்தில் நடத்தப்பட்ட இன் நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் மன்முனை வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த 65 முன்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டு நூல்களை பெற்றுக்கொண்டனர்.

மாவட்ட சுற்றாடல் அதிகாரசபையின் நிலையப் பொறுப்பதிகாரி திரு.எஸ்.கோகுலன் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் முன்பள்ளிக் கல்விக்கான ஆசிரியர் அறிவுரை நூல் பற்றிய விளக்கவுரையை முன்பிள்ளை பருவ மாவட்ட இணைப்பாளர் திரு.வி.முரளிதரன் நிகழ்த்தினார்.

இதில் சுற்றாடல் அதிகாரசபையின் பட்டதாரி பயிலுனர்களும்,மன்முனை வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த  முன்பள்ளி ஆசிரியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.