சட்ட விரோத மரக்கடத்தில் முறியடிப்பு


(கல்குடா செய்தியாளர்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகனேரி புலிபாய்ந்தகல் பிரதேசத்தில் இருந்து ஓட்டமாவடிப் பகுதிக்கு சட்ட விரோதமான முறையில் கொண்டுவரப்படவிருந்த முதிரை மரக் குற்றியையும் உழவு இயந்திரத்தினையும் வாழைச்சேனை பொலிஸார் இன்று (சனிக்கிழமை) காலை கைப்பற்றியுள்ளனர்.


வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லால் பெரேராவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியும் சுற்றாடல் பிரிவு பொறுப்பதிகாரியுமான எல்.அமரசேகர தலைமையில் சென்ற குழுவினர் இருபத்தெட்டு முதுரை மரக் குற்றிகளையும் உழவு இயந்திரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

மரங்களை உழவு இயந்திரத்தில் ஏற்றிய நிலையில் பொலிஸாரைக் கண்டதும் சட்ட விரோத மரங்களை விற்பனை செய்யும் கும்பல் தப்பி ஓடிவிட்டதாகவும் அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.பி.ஈ.ஜயவிர தெரிவித்தார்.