தாண்டவன்வெளி கிராம அபிவிருத்திச்சங்கத்தின் ஏற்பாட்டில் உணவே மருந்தாக இலவச மருத்துவ கருத்தரங்கு

(கிருஸ்ணா)

நோயற்ற  வாழ்வே குறைவற்ற செல்வம் நோயில்லாத வாழ்வதை உறுதிப்படுத்தவேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

நோயற்ற வாழ்வை ஏற்படுத்துவதற்கு பொது அமைக்கள் தமது சேவைகளை மேற்கொண்டுவருவதுபாராட்டத்தக்கது.

மட்டக்களப்பு நகரில் நோயற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

குpராம அபிவிருத்தி சங்கங்கள் கிராம அபிவிருத்திக்கு அப்பால் கிராம மக்களின் சுகாதாரத்துக்கும் சேவையாற்றுவது வரவேற்கத்தக்கது.

மட்டக்களப்பு தாண்டவன்வெளி 177 கிராம அபிவிருத்திச்சங்கம் ஏற்பாடுசெய்த உணவே மருந்தாக இலவச மருத்துவ கருத்தரங்கு சிறப்பாக இடம்பெற்றது.
பூம்புகார் லயன்ஸ் மண்டபத்தில் தாண்டவன்வெளி 177 கிராம அபிவிருத்திச்சங்கத்தின் தலைவர் ஸ்ரீபன் ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் டாக்டர் கே.ரி.சுந்தரேஸன் கருத்துரைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன் கலந்துகொண்டார்.

இதன்போது உணவுப்பழக்கவழக்கங்கள்,உண்ணவேண்டிய உணவுகளின் தெரிவுகள் உட்பட மனிதன் உணவை உண்பதன் மூலம் எவ்வாறு ஆரோக்கியத்தினை ஏற்படுத்தலாம் என்பது தொடர்பில் கருத்துரைகள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளில் இது தொடர்பிலான விரிவான கலந்துரையாடல்களை தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளதாக கிராம அபிவிருத்திச்சங்கத்தின் தலைவர் ஸ்ரீபன் ராஜன் தெரிவித்தார்.

இதன்போது கருத்தரங்கினை திறம்பட நடத்திய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் டாக்டர் கே.ரி.சுந்தரேஸன் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஸ்ரிபன் ராஜனால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.