சிறுவர்களின் வசந்தன் கூத்து அரங்கேற்ற விழா


(து.கௌரீஸ்வரன்)
மட்டக்களப்பு களுதாவளையில் வசந்தன் கூத்தின் சதங்கையணி அரங்கேற்ற விழா  எதிர்வரும் 25.05.2013 சனிக்கிழமை பி.ப 4:00 மணிக்கு களுதாவளை வன்னியனார் வீதியில் இடம்பெறவுள்ளது.

மட்டக்களப்பு  மாவட்ட பாரம்பரிய கலை கலாசார மேம்பாட்டுக் கழகம் 'களரி' ஏற்பாட்டில் களுதாவளை இந்து இளைஞர் மன்றத்தினரினதும் பொது மக்களினதும் ஆதரவுடன்  களுதாவளையைச் சேர்ந்த சிறுவர்கள் பங்குபற்றவுள்ளனர். இந் நிகழ்வு  இந்து இளைஞர் மன்றத் தலைவர் சு.சிவானந்தன் தலைமையில் இடம்பெறவுள்ளது. இக்கூத்தினை கலாபூசணம் தேனூரான் அவர்கள் பயிற்றுவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.