கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் உள்ள 100 வறிய குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பினை கல்முனை மாநகர சபை இன்று வழங்கவுள்ளது. இதில் தமிழ் மக்கள் மிக குறைந்தளவானவர்களுக்கே இவ்விணைப்பு வழங்கப்படவுள்ளதைக் கண்டித்தே கல்முனை மாநகர சபை தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ் நிகழ்வை பகிஸ்கரிப்பதாக மாநகரசபை உறுப்பினர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் முஸ்லிம் தமிழ் விகிதம் 3:1 என்ற ரீதியில் பகிர்ந்தளித்திருக்கப்பட வேண்டும் என்றும், 9 தமிழ் குடும்பங்களுக்கு மட்டும் வழங்கப்படுவது நீதியான செயற்பாடு இல்லை என்றும், இது தொடர்பில் கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிபின் கவனத்திற்க்கு கொண்டுவந்த போதும் பயன் ஏதும் கிட்டவில்லை. இதனால் இந்நிகழ்வில் கலந்து கொள்ளாது தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் தமது எதிர்ப்பினை தெரிவிக்கவுள்ளதாக மாநகர சபை உறுப்பினர் ஜெயக்குமார் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது மாநகர சபையினால் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நூலகத்திற்கு மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிபின் தந்தையின் பெயர் சூட்டப்பட்டப்பட்டு திறப்பு விழா செய்யப்படவுள்ள நிகழ்வை கிழக்கு மாகாண முதலமைச்சர் தடை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.













