கூத்துக் கலைக்கு பெயர் பெற்ற கன்னங்குடாவில் அரங்கேறவுள்ள கூத்துக்கள்.


(சுரேந்திக்கா, கௌரீஸ்வரன்) 
மட்டக்களப்பில் பல்வேறு கிராமங்களிலும் உள்ள கண்ணகியம்மன் கோயில்களில் தற்போது வைகாசிக் குளித்திச் சடங்குகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன.
இந்த வகையில் நேற்றய தினம் 19ம் திகதி ஆரம்பமான கன்னங்குடா கண்ணகியம்மன் சடங்கு விழாவினை சிறப்பிக்கும் வகையில் எதிர்வரும் நாட்களில் ஆலய முன்றலில் எமது பாரம்பரிய கலை,கலாசாரங்களை பிரதியலிக்கும் பல்வேறு வடமோடி,தென்மோடிக் கூத்துக்கள் ஆடப்படவுள்ளன. இந்த கூத்துக்கள் பற்றிய விபரமாவது,

20.05.2013 திங்கள் இரவு – வவுணதீவு கலைஞர்கள் வழங்கும் “பதினாலாம்போர்” வமோடிக் கூத்து.

21.05.2013 செவ்வாய் இரவு – மண்டபத்தடி கலைஞர்கள் வழங்கும் “தருமபுத்திரன்” வடமேடிக் கூத்து

22.05.2013 புதன்  இரவு - பருத்திச்சனை கலைஞர்கள் வழங்கும் “பாசுபதம்” தென்மோடிக் கூத்து.

23.05.2013 வியாழன் இரவு - கன்னங்குடா கலைஞர்கள் வழங்கும் “அல்லி நாடகம்” தென்மோடிக் கூத்து.

25.05.2013 சனி இரவு - கன்னங்குடா கலைஞர்கள் வழங்கும் “சுபத்தரை கல்யாணம்” வடமேடிக் கூத்து.