(கிருஸ்ணா)
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படும் பொருட்களை காத்தான்குடி பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், சந்தேக நபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.
கடந்த மாதம் 25ஆம் திகதி ஆயைரம்பதி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவந்தனர்.
இந்த நிலையில், ஆரையம்பதி, பாலமுனை பிரதேசத்தில் சந்தேக நபர் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மேலும், இந்த சந்தேக நபரிடமிருந்து கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படும் ஒரு தொலைக்காட்சிப்பெட்டியையும் 7 கையடக்கத் தொலைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேக நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.













