சூறாவளியினால் பாதிப்படைந்த கிராமத்தை பார்வையிட்டார் மாகாண சபை உறுப்பினர்


கடந்த  13.05.2013 அதிகாலை வீசிய "மகாசென்" சூறாவளியினால் அம்பாறை மாவட்ட 15ம் கிராமத்தில் வசிக்கும் வீரச்சோலை மகாவித்தியாலய ஆசிரியரான திரு. எஸ். பாஸ்கரன் அவர்களின் வீட்டிற்கு அருகே இருந்த பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் திரு. எஸ். பாஸ்கரனும் அவரது மனைவி மற்றும் 3 பிள்ளைகளும் மயிரிழையில் உயிர் தப்பி உள்ளனர். இதனை அறிந்து அவ் இடத்திற்கு சென்றிருந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் அவர்கள் அதனை பார்வையிட்டதோடு சேதமடைந்த வீட்டிற்கான நஷ்ட ஈட்டினை பிரதேச செயலாளருடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பதாகவும்  மாகாண சபை உறுப்பினர் உறுதியளித்துள்ளார்.