மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி


( சுரேந்திக்கா )
ஏறாவூர்- மைலம்பாவெளி திருமலைவீதியில்  இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது
மோட்டார் சைக்கிள் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாததினால் வீதியில் மோதுண்டு விழுந்ததிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்துக்கள்ளான மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவரும் பின்னால் அமர்ந்து சென்றவரும் வீதியில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் பட்டதில் பலியாகியுள்ளனர்.

ஏறாவூரில் இருந்து காத்தான்குடி நோக்கி சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது. இறந்தவர்கள் ஏறாவூரைச் சேர்ந்த அஹமது லெப்பை முஹம்மது அஸ்மி மற்றும்  முஹம்மது றியாழ் ஆகிய இருவருமாவார். சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பொலிசார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.