கிழக்கு மாகாண சபையை ஏற்று அதனை முதன் முதலில் நிர்வகித்தவன் என்ற அடிப்படையிலும் அத்துடன் அதனை பல வகைகளிலும் பல முறைகளிலும் வலுப்படுத்திய ஓர் சிறுபான்மைக் கட்சியை நெறிப்படுத்துபவன் என்ற அடிப்படையிலும் என்னால்; 13ஆவது திருத்த சட்டத்தை பலவீனப்படுத்துவதற்காக எடுக்கும் எந்த நடவடிக்கைகளையும், ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.என சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில், 'அரசுடன் எமது கட்சி இணைந்து செயற்பட்டாலும் எமது மக்களின் அரசியல் உரிமைகளை பலவீனப்படுத்துகின்ற எந்த செயற்பாட்டையும் நாம் ஏற்க மாட்டோம்'. எனவும் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட "ரெஜி கலாசார மண்டபத்தினை" கடந்த 24ம் திகதி திறந்து வைத்து உரையாற்றியபோது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்படி கருத்துக்களை தெரிவித்தார்.கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட ரெஜி கலாசார மண்டபம் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டது. இக்கட்டிடமானது சுமார் 180 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.












