நற்பிட்டிமுனை சூப்பர் ஸ்டார் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்து நடாத்திய கல்முனை பிரிமியர் லீக் - 3 சுற்று போட்டிகள் கழக தலைவர் ரமேஷ் அவர்களின் தலைமையில் கல்முனை உவெஸ்லி கல்லூரி மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நேற்று 2013.06.02 நடைபெற்று முடிந்தது.இந்நிகழ்வில் அதிதிகளாக கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் லவநாதன் அவர்களும், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜனாப் கபார் அவர்களும், உவெஸ்லி கல்லூரி அதிபர் பிரபாகரன் அவர்களும், Dr.கணேஷ் அவர்களும், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் காத்தமுத்து கணேஷ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இறுதிப்போட்டியில் எட்ரியன் நைட்ஸ் கழகமும் ரிச் லெவன் டைகர்ஸ் கழகமும் மோதின. இதில் கல்முனை பிரிமியர் லீக் - 3 க்கான சாம்பியனாக எட்ரியன் நைட்ஸ் கழகம் வெற்றி வாகை சூடியது.





















