மட்/ வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் 'கலைமகளின் சமர் - 2013' மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி 12.06.2013 அன்று உடற்கல்வி ஆசிரியர் பூ.சுதானந்தனின் வழிகாட்டலில் நடைபெற்றது.க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கும், க.பொ.த உயர் தர மாணவர்களுக்கும் இடையே நடைபெற்ற இப் போட்டியில் உயர் தர மாணவர்கள் வெற்றியீட்டினர். இவர்களுக்கான வெற்றிக் கேடயத்தினை பிரதம அதிதியாக கலந்து கொண்ட வித்தியாலயத்தின் அதிபர் ச.கணேசமூர்த்தியினால் வழங்கிவைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதி அதிபர், உதவி அதிபர், ஆசிரியர்கள். கல்வி சாரா ஊழியர்கள், மாணவர்கள் அனைவரும் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.












