மட்டக்களப்பு- இருதயபுரம் கிழக்கு நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நாளை 22ம் திகதி எண்ணைய்க் காப்பு-23ம் திகதி கும்பாவிஷேகம்.


(சுரேந்திக்கா)     இருதயபுரம் - கிழக்கு நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சிறிய ஆலயத்தில் விக்கிரகங்களுக்கு நாளை காலை 6 மணி தொடக்கம் பி.ப. 5 மணிவரை எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும். இவ் அலயத்தில்  நாகபூசணி அம்மன் புனராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாவிஷேகம் எதிர்வரும் 23ம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் மாதம் 6 ம் திகதி பாற்குடபவனி மட்டக்களப்பு கொத்துக்குளத்து மாரியம்மன் ஆலயத்திலிருந்து எமது நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தை வந்தடையும்.
எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்விலும் கும்பாவிசேக நிகழ்விலும் பக்தர்களை கலந்துகொண்டு இறையருளை பெற்றேகுமாறு ஆலய பரிபாலன சபையினர் அழைக்கின்றனர்.