சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 23 பேர் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலீஸ் பிருவுக்குட்பட்ட செட்டிப்பாளையம் கரையோரத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் இந்தக் குழுவினர் அவுஸ்திரேலியா பயணமாக முற்பட்ட சந்தர்ப்பத்தில் இன்று அதிகாலை செட்டிப்பாளையம் கரையோரத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வவுனியா, செட்டிக்குளம், களுவாஞ்சிக்குடி, வென்னப்புவ, பிங்கிரிய, மாரவில ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 6 ஆண்கள், 8 பெண்கள் மற்றும் 9 சிறுவர்கள் அடங்குகின்றனர்.
கைதானவர்களை நீதிமன்றில் ஆஜர்செய்வதற்கான நடவடிக்கைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.













