(சித்தா)
UNICEF அனுசரணையில் வலயக் கல்வி அலுவலர்களுக்கான புள்ளிவிபரத்தினை மையப்படுத்தி மாணவர் அடைவினை அதிகரிப்பதற்கான வளவாளர் பயிற்சி சத்துருக்கொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.சுபாசக்கரவர்த்தி தலைமையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. மூன்று நாள் வதிவிடப்பயிற்சியாக நடைபெறும் இப் பயிற்சி வகுப்பில் திட்டமிடலுக்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், முறைசாராக் கல்விப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், வலய யுனிசெவ் பிரதிநிதிகள், என 20 பேர் இப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
இன்று இப் பயிற்சியின் ஒரு கட்டமாக பாடசாலைகளின் ஊட்டப் பிரதேசத்தினை இனங்காணலும் அதனை வரைதலுக்குமான பயிற்சினை பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலக ஆசிரிய மத்திய நிலைய முகாமையாளர் திரு.சி.குருபரன் முன் வைத்தார்.












