(தீரன்)
இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் “புண்ணிய கிராமம்” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு இந்து ஆலயங்களின் அறங்காவலர் சபையினரை சந்தித்து கலந்துரையாடும் நிகழ்வு நேற்றையதினம்(02.06.2013) நடைபெற்றது.
மட்டக்களப்பு கல்லடி இசைநடனக் கல்லூரியில் நடைபெற்ற இன் நிகழ்வில் ஆலயங்களின் ஊடாக கிராமங்களுக்கான சமூகசேவைகள் செய்வதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
ஆலயங்கள் ஆன்மிகத்தை போதிப்பதோடு ஆலயங்களின் வசதிக்கேற்ப வறுமையான, உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு ஆலய அறங்காவலர் சபையினர் முன்வரவேண்டுமெனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் “புண்ணிய கிராமம்” நிகழ்ச்சித்திட்டம் ஊடாக எதிர் காலத்தில் இந்து ஆலயங்களுடாக பாதிக்கப்பட்ட,வறுமையான மக்களுக்கும்,அங்கவீனர்களுக்கும்,வறுமையான மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் உதவிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இன் நிகழ்வில் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திரு.ம.சண்முகநாதன் அவர்கள் கலந்துகொண்டதுடன், மாவட்ட இந்து கலாசார அலுவல்கள் திணைக்கள அதிகாரிகள்,மாவட்ட இந்து ஆலயங்களின் அறங்காவலர் சபையினர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.