வந்தாறுமூலை மயானத்துக்கு வாட்டுரொட்டியுடன் வந்த துரைராஜசிங்கம் கி.மா.ச உறுப்பினர்

காடு வளர்ந்து யாரும் போக அஞ்சும் அளவுக்கு மோசமாக இருந்த வந்தாறுமூலை பொது மயானத்தை திருத்தும் வேலைகளை ஒரு வந்தாறுமூலை வாசி தன் சொந்தப்பணத்தில் திருத்திக் கொண்டிருக்கையில் வாட்டு ரொட்டியும் ஆட்டுக்காலும் சொப்பின் பாக்கில் வாங்கி வந்திருக்கிறாராம் துரைராஜசிங்கம் மாகாண சபை உறுப்பினர். என்ன கேவலம் பாருங்கள் தான் பிறந்த மண்ணில் உள்ள மயானத்தை அந்த ஊரைச்சேர்ந்த ஒர தனிமனிதன் தனது பணத்தில் துப்பரவு செய்யும் வேலைகளைச் செய்கையில் ஒரு முன்னாள் எம்பி என்கிற பாராளுமன்ற உறுப்பினர். இன்நாள் மாகாண சபை உறுப்பினர் மட்டக்களப்பு நகரில் இருந்து ஆட்டுக்காலும் வாட்டு ரொட்டியுமாக வாங்கி வருவது என்று கவலை கொள்கின்றனர். என்ஊரவனுக்கு ஒரு நாளும் நகர் வாசம் தெரியாது. நாம தான் நகரப்பார்த்தவன் இந்த ஊரவனுக்கு வாட்டு ரொட்டி குடுத்தாப் போதும் என்ற நினைப்புத்தான் இது பாருங்க தம்பி என்று வந்தாறுமுலைக்காரர் ஒருவுர் கவலைப்பட்டார். அத நாங்க சாப்பிடுவமா பக்கத்தில இருந்த பிள்ளையளுக்குக் குடுத்துத்து வந்தம். இந்த வாட்டு ரொட்டிய வாங்கித்து மட்டக்களப்புல இருந்து வரத்தேவல தானே. சும்மா வந்து பாத்திருக்கலாமே ஏன் நாங்க அவ்வளவு கேவலமானவங்களா. பாருங்க. ஊரப்பழதாக்குறதுக்கு என்டு சிலர் வெளிக்கிட்டிருக்காங்க அவங்களுக்குத்தான் இவரு சரி. உலகம் ஓடிக்கொண்டிருக்கு மாறியும் போச்சு அதுட வேகத்துக்கு நம்மட ஊர மாத்துவம் என்டு யோசிக்காம ஊரிலயே வாட்டுரொட்டி எடுக்கிறதெண்டா கஸ்ரம் எங்க தேடி இத எடுத்தாரோ தெரியல பாருங்க என்று கவலை கொள்கின்றனர் வந்தாறுமூலை மக்கள்.