(ச.சுரேந்திக்கா) மட்டக்களப்பு - புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலய தீ மிதிப்பின் போது பக்தர்களின் தங்கச் சங்கிலிகளைத்திருடியதாக கூறப்படும் பெண்ணொருவர் உட்பட இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீ மிதிப்பு தினமான நேற்று வெள்ளிக்கிழமை மாலைஆலயத்திற்கு வந்த இருவரின் தங்கச் சங்கிலிகளே இவ்வாறு திருடப்பட்டுள்ளன. ஒருவரின் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிய வேளையும், மற்றையவரின் சங்கிலியை அறுக்க முயற்சித்த வேளையுமே இவ்விருவரும் கைது செய்யப்பட்டதாக அறியமுடிகின்றது. இவர்களில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 7ம் திகதி வௌ்ளிக் கிழமை ஆரம்பமான புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த உற்சவ விழாவில் தீ மிதிப்பு வைபவம் நேற்று மாலை இடம்பெற்றது.












