ஆலையடிவேம்பு கராத்தே சங்கத்தின் ஏற்பாட்டில் அதிஷ்டலாபச் சீட்டிலுப்பு .

(உ.உதயகாந்த்)

ஆலையடிவேம்பு கராத்தே சங்கத்தின் ஏற்பாட்டில் சங்கத்தின் வளச்சியை மேம்படுத்தும் நோக்கத்திற்காக விற்பனை செய்யப்பட்ட  அதிஷ்டலாபச் சீட்டுக்களை குலுக்கல் மூலம் தெரிவு செய்யும் சீட்டிலுப்பு நிகழ்வானது கிழக்கு மாகாண கராத்தே சங்கத்தின் தலைவர் சந்திரலிங்கம் அவர்களின் தலைமையில் அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிஷன் பாடசாலை மண்டபத்தில் இன்று காலை 10.00 மணியளவில்  இடம்பெற்றது.

இன் நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரு .வே.ஜெகதீசன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், கௌரவ அதிதிகளாக சிகான் கே.ராமசந்திரன் ,ஆலையடிவேம்பு  கோட்டக்கல்வி   பணிப்பாளர்  குணாளன்,அம்பாறை  மாவட்ட செயலக உள்ளக கணக்காய்வாளர் கணகரெட்னம் மற்றும் பாடசாலைகளின் அதிபர்களும் ,கராத்தே போதனாசிரியர்களும் கலந்து கொண்டனர். 

மேலும் இன் நிகழ்வின்போது அதிதிகளால் சாதனைபடைத்த  கராத்தே சாதனையாளர்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் ,  அதிஷ்டலாபச் சீட்டிலுப்பில் தெரிவு செய்யப்பட்ட வெற்றியாளர்களுக்காண பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.