கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்க்கு நேற்று 29.06.2013 திடீர் விஜயம் மேற்கொண்ட உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன அவர்கள் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தையும் கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்தையும் ஒன்றாக இணைத்து ஒரு சிங்கள பிரதேச செயலாளரை நியமிப்பது எனவும், முஸ்லிம் ஒருவரையும் தமிழர் ஒருவரையும் உப பிரதேச செயலாளர்களாக நியமிப்பதெனவும் கூறியிருப்பது, கல்முனை பிரதேச மக்களை அதிர்ச்சியும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கல்முனை வாழ் தமிழ் மக்கள் இந்த கபட நாடகத்தை ஒரு பொது ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அத்துடன் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி நாங்களே ஆள வேண்டும். இதற்க்கு சகல அரசியல் வாதிகளும், புத்தி ஜீவிகளும், சமூக அமைப்புகளும் துரிதமாக செயற்பட வேண்டும்.
அத்துடன் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் பெற்றுக் கொள்வதற்காக எடுக்கப்பட முன்னெடுப்புகளையும், இழப்புகளையும், துரோகங்களையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
கல்முனை தமிழர்களுக்கென்று தனியான பிரதேச செயலகம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போது கல்முனை தமிழ் பிரிவு, காரைதீவு, ஒட்டுசுட்டான், ஈச்சிலம்பற்று ஆகிய உப பிரதேச செயலகங்கள் தரமுயர்துவதற்கான 28.07.1993ம் திகதிய அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால் கல்முனை தமிழ் பிரதேச செயகலம் மட்டும் வர்த்தக மானி மூலம் அறிவிக்கப்படாமலும், தரமுயர்த்தபடாமலும் உள்ளமை மிகவும் மன வேதனைக்குரிய விடயமாகும்.
கல்முனை தமிழ் பிரதேச செயலக பிரிவுற்குள் 34,000 தமிழ் மக்களும், 29 கிராம சேவையாளர் பிரிவுகளும் உள்ளது. அத்துடன் தனிய கட்டிடமும், சகல பௌதீக வளமும் ஆளணியுடன் உள்ள இப்பிரதேச செயலகத்தை தரமுயர்துவதில் உள்ள தடைகளை உலகிற்க்கு வெளிக்காட்ட வேண்டும். இதற்க்கு முழு காரணமும் முஸ்லிம் அரசியல் வாதிகளே. இவர்களது திட்டமிட்ட அரசியல் அராஜகம் இன்று நேற்றல்ல பலகாலமாக நடந்தேறி வருகின்றது.
கல்முனை பிரதேசத்தில் வாழும் 34,000 தமிழ் மக்களும் 46,500 முஸ்லிம் மக்களுக்கும் ஒரு பிரதேச செயலகமெனில், லகுகலவில் 9808 பேருக்கு ஒரு பிரதேச செயலகம். பதியத்தலாவில் 17,502 பேருக்கு ஒரு பிரதேச செயலகம். இது எந்த வகையில் நியாயம்.?
இந்த அமைச்சரினால் முன்வைக்கப்பட்டுள்ள இவ் அநியாயத்துக்கு அனைத்து தமிழ் அரசியல் வாதிகளும், தமிழ் முஸ்லிம் புத்தி ஜீவிகளும், போது அமைப்புகளும் சாத்வீக வழியில் தங்களது எதிர்ப்பினை காட்ட முன்வர வேண்டும் என்று கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.