சுற்றாடல் அதிகாரசபையினால் நடத்தப்பட்ட உலக சுற்றாடல் தின நிகழ்வுகள்!

(தீரன்)
மட்டக்களப்பு மாவட்ட சுற்றாடல் அதிகார சபையினால் உலக சுற்றாடல் தின நிகழ்வுகள் நடத்தப்பட்டுவருகின்றது.


வருடா வருடம்  யூன்-05ம் திகதி உலக சுற்றாடல் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. 2013ம் ஆண்டுக்கான உலக சுற்றாடல் தின நிகழ்வுகளை இம்முறை மத்திய சுற்றாடல் அதிகார சபையுடன் இணைந்து மாவட்ட சுற்றாடல் அதிகார சபையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

2013ம் ஆண்டுக்கான உலக சுற்றாடல் தினத்தை  “அநாவசிய நுகர்வினை கட்டுப்படுத்தல்” எனும் தொனிப்பொருளிலான நிகழ்வுகளை சுற்றாடல் அதிகார சபையினர் முன்னெடுத்துவருகின்றனர்.

நேற்றைய தினம்(05.06.2013) மட்டக்களப்பு கோரளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மடஃவாழைச்சேனை இந்துக்கல்லூரி, மடஃபுதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயம், கோரளைப்பற்று பிரதேச செயலகம் போன்ற இடங்களில் மாவட்ட சுற்றாடல் அதிகார சபையினால் உலக சுற்றாடல் தின நிகழ்வுகள் நடத்தப்பட்டது.

இங்கு “அநாவசிய நுகர்வினை கட்டுப்படுத்தல்” சம்பந்தமாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டதுடன், மரநடுகை நிகழ்வுகளும் நடைபெற்றன.

பாடசாலை அதிபர்,பிரதேச செயலாளர் திருமதி.தினேஸ் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் மாவட்ட சுற்றாடல் அதிகார சபையின் மாவட்ட சுற்றாடல் உத்தியோகத்தர் திரு.ச.தட்சாயினி அவர்கள் கலந்துகொண்டதுடன்,ஆசிரியர்கள், மாணவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.