(சுரேந்திக்கா) மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் அதி சுந்தர சப்த தள நூதன மஹா இராஜகோபுர சகிக புனராவர்த்தன அஷ்டபந்தன உத்தம நவகுண்ட பஷ மஹாயாக பிரதிஸ்ட மஹா கும்பாவிஷேகத்திற்கான பூசை நிகழ்வுகள் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது
இதில் ஓர் முக்கிய நிகழ்வாக ஒன்பது வாயில்கள் திறப்பு எனப்படும் விக்கிரகங்களுக்கு கண் திறக்கும் நிகழ்வு இன்று காலை ஆலயத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வு சிற்பாச்சாரியார் ரமேஸ்குமார் அவர்களினால் அனைத்து விக்கிரகங்களுடைய கண்களையும் திறக்கச் செய்தார். தொடர்ந்து விக்கிரகங்களுக்கு தானியங்கள் சொரியப்பட்டு கிரியைகள் இடம்பெற்றது.
இன்று காலை கோமாதா அழைப்பு பூசையும் விசேடமாக இடம்பெற்றது.





























