வௌ்ளை வானில் குடும்பத்தைக்கடத்திய ஆறு பேருக்கும் பிணை

நாலுபேர் கொண்ட குடும்பத்தை வெள்ளை வானில் கடத்திய கும்பலைச் சேர்ந்த ஆறு பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் நேற்று வெள்ளிக்கிழமை  விடுவித்துள்ளது.

இவர்களை நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவேளை இவர்களை எதிர்வரும் ஜுலை 16ஆம் திகதி ஆஜராகும்படி உத்தரவிட்டதுடன், ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்ச ரூபா சரீரப்பிணையில் செல்லுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

தும்பன்கேணியிலிருந்து தாய், தந்தை மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகளை கடத்திய சந்தேகத்தில் கடந்த 12ம் திகதி (புதன்) அன்று 6 பேர் கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.