
(தீரன்)
மட்டக்களப்பு மயிலம்பாவெளி பிரதேசத்தில் கிணற்றிலிருந்து ஆண் குழந்தையொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் கிராமத்திலுள்ள வீட்டு கிணற்றிலிருந்தே இன்று நண்பகல் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குழந்தையை தான் தொட்டிலில் உறங்க வைத்துவிட்டு வீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டிருந்ததாகவும் பின்னர் பார்த்தபோது தனது குழந்தை காணாமல் போயுள்ளதாகவும் தனது குழந்தையை காணவில்லையென தேடியபோது வேறொரு வளவிலிருந்த கிணற்றில் குழந்தை சடலமாகக் காணப்பட்டதாகவும் உயிரிழந்த குழந்தையின் தாய் ஏறாவூர் பொலீசில் தெரிவித்துள்ளார்.
குழந்தையின் சடலம் ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருவதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்பத் தகராறு காரணமாகவே மேற்படி 10 மாதக் குழந்தையை கிணற்றில் வீசியெறிந்துள்ளதாக சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.












