தேசிய இரத்ததான சேவையுடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய இரத்ததான முகாம்களை நடாத்தியதற்காகவும் மற்றும் அதி கூடிய இரத்ததானங்களை வழங்கியதற்காகவும் மூவருக்கு கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் வைத்து அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களால் கெளரவிக்கப்பட்டு ஞாபக விருதும் வழங்கிவைக்கப்பட்டது.
இதில் அதிகூடிய இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்து நடாத்தியதற்காக செ.பிரான்சிஸ் அவர்களுக்கும், அதி கூடிய இரத்ததானங்களை வழங்கியதற்காக வெ.கிருஸ்டி மற்றும் அ.கோகுலன் ஆகியேருக்கும் விருதுகள் வழங்ககப்பட்டது.
இந் நிகழ்வின்போது அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அவர்களும் கல்ந்து கொண்டார்.













