அம்பாறை மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கனடா வாழ வைக்கும் சமூகத்தினரால் நிதியுதவி

அம்பாறை மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட, கணவனை இழந்த குடும்பங்களுக்கு கனடா வாழ வைக்கும் சமூகத்தினரால் வழங்கப்பட்ட நிதியுதவியினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் அவர்களால் கையளிக்கப்பட்டது.

மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் அவர்கள் இந்நிகழ்வின் போது உரையாற்றுகையில்,

அம்பாறை மாவட்டத்தில் யுத்தத்தினாலும், வன் செயல்களினாலும் பாதிக்கப்பட்ட ஏராளமான குடும்பங்கள் இன்னும் கஷ்டத்தின் மத்தியில் வாழ்வாதாரத்தை நடத்திக்கொண்டு இருக்கின்றனர், இப்பிரச்சனையினால் குழந்தைகளுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளில் தாக்கம் செலுத்துகின்றது, இந்த வகையில் கனடா வாழவைக்கும் சமூகத்தினரால் வழங்கப்பட்டுள்ள இவ் நிதியுதவியானது பெரும் உதவியாக அமையும், இம்மக்கள் கனடா வாழ வைக்கும் சமூகத்தினருக்கு என்றும் கடமைபட்டவர்களாகவே இருப்பர் என்றும், இவ்வுதவிகள் மென்மேலும் எமது சமூகத்திற்க்கு மேற்கொள்ளவேண்டும், எமது சமூக முன்னேற்றங்களுக்காக எமது கட்சி என்றும் செயற்படும். அத்துடன் கற்றல் செயற்படுகளுக்கான உதவிகளுக்கு எனது வாசல் கதவு என்றும் திறந்தே இருக்கும். என்று மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் அவர்கள் மேலும் உரையாற்றினார்.