ITASD நிறுவனத்தினால் கடந்த 23ம் திகதியன்று அன்று கிழக்கு மாகாண இளைஞர்களுக்காக தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப துறையில் சுயதொழிலை மேற்கொள்ளுவதற்கான ஆலோசனைகளும் செயன்முறைப்பயிற்சியும் மட்டக்களப்பு தன்னாமுனையில் வழங்கப்பட்டது.
இதில் சுமார் 50 இளைஞர்கள் கலந்து கொண்டனர், இப் பயிற்சி நெறியில் இணைய நிறுவல்,இன்டர்காம் நிறுவல்,CCTV நிறுவல் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்படடிருந்தது. இன் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் கௌரவ வினாயகமூர்த்தி முரளிதரன் அவர்களும் மற்றும் சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண அபிவிருத்தி இணைப்பதிகாரி திரு பேட்டி பெரேரா அவர்களும் கலந்து கொண்டனர்.
இன் நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் அவர்கள், இப்பயிற்சி நெறியை பூர்த்தி செய்த இளைஞர்கள் சுயதொழிலை மேற்கொள்ள விரும்பினால் அவர்களுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் அமைச்சின் மூலம் ஏற்பாடு செய்து தரப்படும் எனவும், இது போன்ற பயிற்சி நெறிகளை தொடர்ந்து நடத்த தனது ஆதரவையும் அளிப்பதாக தெரிவித்தார்.



























