மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்பாளின் தீ மிதிப்பு நிகழ்வு!(video,photos)

(தீரன்)
மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்பாளின் தீ மிதிப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

நேற்று(7.06.2013) மாலை நடைபெற்ற புன்னைச்சோலை பத்திரகாளி அம்பாளின் தீ மிதிப்பு நிகழ்வில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு தங்களது நேர்கடன்களை செலுத்தினர்.

இம்முறை புன்னைச்சோலை பத்திரகாளி அம்பாளின் ஆலயத்திற்கான போக்குவரத்து ஒழுங்குகளையும், பாதுகாப்பு பணிகளையும் மட்டக்களப்பு பொலீசார் மிகவும் திறன்பட செய்தமையினால் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி இலகுவாக ஆலயத்திற்கு சென்று வரக்குடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.