கல்முனை றோட்டரிக்கழகத்தின் 13வது தலைவராக ஹென்றி நாளை பதவியேற்பு


(வி.ரி.சகாதேவராஜா)  
கல்முனை றோட்டரிக்கழகத்தின் 13வது தலைவராக பொறியியலாளர் றோட்டரியன் ஹென்றி அமலராஜ் நாளை 27ம் திகதி சனிக்கிழமை பதவியேற்கவிருக்கிறார்.

பதவியேற்பு வைபவம் தற்போதைய 12வது தலைவர் றோட்டரியன் ச.உருத்திரன் தலைமையில் கிரான்குளம் சீ மூன் விடுதியில் நடைபெறும்.
இவ் வைபவத்திற்கு பிரதம அதிதியாக றோட்டரிக்கழகத்தின் மாவட்ட உதவி ஆளுநர் றோட்டரியன் வி.இராமநாதன் கலந்துகொள்கிறார்.
கௌரவ அதிதிகளாக சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் கல்முனை றோட்டரிக்கழகத்தின் ஸ்தாபக தலைவர் றோட்டரியன் டொமிங்கோ ஜோர்ஜ் ஆகியோர் கலந்து கொள்வர்.

இந் நிகழ்வின்போது புதிய நிருவாகசபை உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்வுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.