பிரதேச அபிவிருத்தி வங்கியின் 28ஆவது ஆண்டு நிறைவு விழா

பிரதேச அபிவிருத்தி வங்கியின் 28ஆவது ஆண்டு நிறைவு விழாவும், இதுறும் உதான புதிய சேமிப்பு கணக்குத் திட்ட அங்குரார்ப்பணமும் நேற்றைய தினம் மட்டக்களப்பு செங்கலடிக் கிளையில் நடைபெற்றது. கிளையின் முகாமையாளர் விஸ்வலிங்கம் புலேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

 இந்நிகழ்விற்கு அதிதியாக பிரதேச அபிவிருத்தி வங்கியின் பிராந்திய முகாமையாளர் எஸ்.சந்தனம் கலந்து கொண்டார். பிரதேச அபிவிருத்தி வங்கியின் வாடிக்கையாளர்களின் நலன் கருதி ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தில் சீட்டிழுப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதே நேரம், இலங்கையிலுள்ள பிரதேச அபிவிருத்தி வங்கியின் 264 கிளைகளிலும் நேற்றைய தினம் இதுறும் உதான புதிய சேமிப்பு திட்டம் அங்குரார்ப்பன நிகழ்வு நடைபெற்றது. அதை;து வங்கிக் கிளைகளிலும் பெருந்தொகையான வாடிக்கையாளர்கள் கணக்குகளை ஆரம்பித்துக் கொண்டதாக பிரதேச அபிவிருத்தி வங்கியின் பிராந்திய முகாமையாளர் தெரிவித்தார். பிரதேச அபிவிருத்தி வங்கியின் மட்டக்களப்பு, செங்கலடி, ஏறாவூர், கொக்கட்டிச்சோலை, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி என அனைத்து இடங்களிலும் கிளைகள் இயங்கி வருகின்றன.