சுவாமி விபுலானந்த அழகியல் கற்கை நிறுவகம் நடாத்திய விபுலானந்தரின் 66வது நினைவு தின நிகழ்வுகள். போட்டோ&வீடியோ

(ச.சுரேந்திக்கா)  
சுவாமி விபுலானந்தரின் 66வது நினைவு தின நிகழ்வுகள் இன்று19ம் திகதி மட்டக்களப்பில் அமைந்துள்ள  சுவாமி விபுலானந்த அழகியல் கற்கை நிறுவக (இலங்கை) வளாகத்திலுள்ள இராசதுரை கலையரங்கில் அனுஷ்டிக்கப்பட்டது. 

இந் நிகழ்வு அழகியல் கற்கை நிறுவகம் கி.ப.கழகததின் பணிப்பாளர் கலாநிதி க.பிரேமகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது அழகியல் கற்கை நிறுவகம் கி.ப.கழகததின்  சிரேஷ்ட உதவி பதிவாளர் ஏ.ஜே.கிருஸ்ரி,  மட்டக்களப்பு சிவில் சமுக அமைப்பின் தலைவர் எஸ்.மாமாங்கராஜா, அழகியல் கற்கை நிறுவகம் கி.ப.கழகத்தின்  சிரேஷ்ட உதவி நிதியாளர் எஸ்.கே.ஜெயவர்தன போன்றோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் சுவாமி விபுலானந்தரை நினைவு கூரும் வகையில் பல கலை நிகழ்வுகள் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கை நிறுவக மாணவ மாணியர்மற்றும் விரிவுரையாளர்களால் நிகழ்த்தப்பட்டது. இதில் குறிப்பாக "சுவாமி புபுலானந்தரை நினைத்தலும் நினைவில் கொள்ளலும்" எனும் காணொளி காட்சித் தொகுப்பு மற்றும்  "மீன் மகள் பாடுகிறாள்....." எனும் பாடலுக்கான நடனம் மிக சிறப்பாக அமைந்திருந்ததனை குறிப்பிடலாம்.