சட்டவிரோதமான முறையில்அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 70 போர் இன்று 31ம் திகதி புதன்கிழமை வாழைச்சேனை கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் படகின் மூலமாக அவுஸ்திரேலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை திருகோணமலைக்கு கொண்டு செல்வதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வோரை ஏற்றியதாக சந்தேகத்தின்பேரில் மட்டக்களப்பு நகர் பகுதியில் சில வாகனங்களையும் பொலீசார் கைப்பற்றியுள்ளனர்.












