அக்கரைப்பற்று பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் வறுமை மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரு.வே.ஜெகதீசன் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று 24.07.2013 புதன்கிழமை காலை இடம்பெற்றது.
இந் நிகழ்வில் அக்கரைப்பற்று 7/2, அக்கரைப்பற்று 8/3, அளிக்கம்பை கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டு ரூபாய் இருபத்தையாயிரம் பெற தகுதியான மூன்று குடும்பங்களுக்கு முதற் கட்டமாக ஒரு குடும்பத்திற்கு ரூபாய் பதினையாயிரம் பெறுமதியான காசோலை வழங்கப்பட்டது.
மேலும் இந் நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்களான திருமதி. பவானி வரதராஜன் , திரு. முரளிதரன், திரு.லோகநாதன் மற்றும் பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தின் உத்தியோகத்தர்களான திரு.இ.பிரபாகரன், திரு. ச.நாகேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.














