சிங்கப்பூர் பல்கலை மாணவர்கள் வந்தாறுமூலை விஸ்ணுவுக்கு விஜயம்

சிங்கப்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம் மட்டக்களப்பு வந்தாறுமூலை விஸ்ணு மகா விததியாலயத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு பாடசாலையில் அதிபர் எஸ்.மோகன், ஆங்கில, கணினி கற்பிக்கும் ஆசிரியர்களை சந்தித்ததுக் கலந்துரையாடினர். இச் சந்திப்பின் போது, எதிர்வரும் டிசெம்பர் மாதம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் தொடர்பிலும் அவர்களது கல்வி மேம்பாடு தொடர்பில், தங்களால் நடைமுறைப்படுத்த விருக்கும் ஆங்கில, கணினி இலவச கருத்தரங்கு பற்றியும் கலந்துரையாடினர். அதே நேரம், தங்களால் ஆரம்பிக்கப்படவுள்ள தமது திட்டம் தொடர்பிலான நடைமுறைச் சாத்தியவள ஆய்வை மேற்கொள்வதற்காக இச்சந்திப்பு நடைபெற்றது.