அம்பாறை மத்தியமுகாம் பிரதேசத்தில் நேற்று 26ம் திகதி வெள்ளிக்கிழமை காலை குளிப்பதற்காகச் சென்ற முதியவர் ஒருவர் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இவர் கிணற்றில் குளிப்பதற்காகச் சென்றபோது கிணற்றில் தவறி வீழ்ந்துள்ளார். கிணற்றில் வீழ்ந்த சத்தம் கேட்டுச் சென்ற மனைவி அயலவர்களின் உதவியுடன் இவரை மீட்டு மத்தியமுகாம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளதாக மத்தியமுகாம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஹேகன முனசிங்கா தெரிவித்தார்.
மத்தியமுகாம் 11ஆம் கொலனியைச் சேர்ந்த வெற்றிவேல் குணசேகரம் (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் களுவாஞ்சிக்குடி பிரதேச சபையில் கடமையாற்றுவதாகவும் அறியமுடிகின்றது.
இவரது மரணம் தொடர்பான விசாரணையை மத்தியமுகாம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்












