(உ.உதயகாந்த்)
அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் ஆலையடிவேம்பு கிராம உதிதியோகத்தர் பிரிவில் இயங்கிவரும் சிவில் பாதுகாப்பு குழுவில் அங்கத்துவம்வகிக்கும் அங்கத்தவர்களுக்கான அடையாள அட்டைகள் இன்று 2013.07.12 ஆம் திகதி ஆலையடிவேம்பு I.O.M கட்டிடத்தில் பிரதேச செயலாளர் திரு .வே.ஜெகதீசன் அவர்களின் ஏற்பாட்டில் காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.
இன் நிகழ்விற்கு பிரதம அதிதியாக திகாமடுல்லை பாராளுமன்ற உறுப்பினர் பொ.பியசேன அவர்கள் கலந்து கொண்டதுடன், சிறப்பு அதிதியாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜனாப்.ஹாஜா முகைதீன் அவர்களும் , ஆலையடிவேம்பிற்கு பொறுப்பான சிவில் பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தரும், கிராம உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் , பட்டதாரி பயிலுனர்கள் மேலும் கிராம மட்ட குழு தலைவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
மேலும் இந் நிகழ்வில் விசேட அடையாள அட்டைகள் வழங்கிவைக்கப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் பொ.பியசேன அவர்களால் வறிய விவசாயிகளின் நன்மை கருதி விவசாயிகளுக்கான தெளி கருவிகளும் வழங்கிவைக்கப்ப்ட்டன.












