சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்

(வி.ரி.சகாதேவராஜா) 
காரைதீவைச் சேர்ந்த விஜயரெத்தினம் விஜயசாந்தன்  தீவு (இலங்கை) முழுவதுக்குமான சமாதான நீதவானாக கல்முனை உயர்நீதிமன்ற ஆணையாளர் பி.சுவர்ணராஜ் முன்னிலையில் இன்று 26ம் திகதி சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் தேசிய தொழினுட்ப டிப்ளோமா சான்றிதழ் பெற்ற இவர் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபையின் காரைதீவுப் பிரதேச நிலையப்  பொறுப்பதிகாரியாவார்.

காரைதீவு சண்முகா வித்தியாலயத்திலும் விபுலானந்தா மத்திய கல்லூரியிலும் கல்வி பயின்ற  விஜயசாந்தன் காரைதீவு விளையாட்டுக்கழகத்தின் பொருளாளராவார். அத்துடன் இவர் ஒரு சிறந்த சமுகசேவையாளராவார்.