இச்சம்பவம் தொடர்பில் பொலிசாரிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மத்தியமுகாம் - 06 கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள 30 வயதுடைய வடிவேல் கிருஷ்ணகுமாரி என்பவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
தனியாக வீடொன்றில் வசித்துவந்த இவர் கடந்த சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் குழந்தையை பிரசவித்ததாகவும், அதனை தனது வளவில் புதைத்ததாகவும் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
கல்முனை மேல்நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு நேரடியாக விஜயம் செய்து சடலத்தை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிசாரிற்கு உத்தரவிட்டுள்ளார்.

சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்தியமுகாம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.