முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான கடமை முன்னேற்றம் தொடர்பான நிகழ்வு!

(தீரன்)
மட்டக்களப்பு மாவட்ட முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான கடமை முன்னேற்றம் தொடர்பான நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நேற்றைய தினம் 04.07.2013 (வியாழக்கிழமை) நடைபெற்ற இன் நிகழ்வில் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் முன்பள்ளி மாணவர்களுக்கான ஒரு கிளாஸ் பால் (Glass of Milk Programme) வழங்கும் வேலைத்திட்டம், விழிப்புணர்வுக் கருத்தரங்குகள், முன்பள்ளி விளையாட்டுமுற்றம்(Play Area)  அமைத்தல்,கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கல் போன்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், அரசசார்பற்ற நிறுவனங்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முன்பள்ளி அமைத்தல், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு வழங்குதல், விளையாட்டுமுற்றம் (Play Area)  அமைத்தல், விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் நடத்ததல் போன்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன். Plan Sri Lanka         
அனுசரணையில் 14பிரதேச செயலக பிரிவுகளிலும் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கான காகிதாதிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

இன் நிகழ்வில் அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ், மாவட்ட உதவிச் செயலாளர் வி.வாசுதேவன் ,மாவட்ட முன்பிள்ளைபருவ இணைப்பாளர் வி.முரளிதரன் அகியோருடன் 14  பிரதேச செயலகப் பிரிவுகளிளும் கடமையாற்றும் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், பட்டதாரி பயிலுனர்களும் கலந்துகொண்டிருந்தனர்.