உயர் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்ட தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்துக்கான செயற்திட்டம் இன்றைய தினம், கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்றும் நாளையும் அனைத்து ஊழியர்கள், உத்தியோகத்தர்கள், விரிவுரையாளர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளும் வகையில் பிரமாண்டமான முறையில் சிரமதான பணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன் தொடக்க நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் கிழக்கு பல்கலைக்கழக நிருவாக கட்டிட தொகுதி முன்பாக ஓன்று கூடல் இடம் பெற்றது.இந் நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா அவர்கள் தொடக்கவுரை நிகழ்த்தி ஆரம்பித்தார். பதிவாளர் கே மகேசன் அவர்களும் உரையாற்றி உத்தியோகபூர்வமாக சிரமதான பணி தொடக்கி வைக்கப்பட்டது. கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஒத்துழைப்போடு பெருந்திரளான ஊழியர்கள் உச்சகமாக கலந்து கொண்டிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் டெங்கு நோய் சம்பந்தமாக கிழக்கு பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட துண்டு பிரசுரத்தை உத்தியோகபூர்வமாக விஞ்ஞான பீட பீடாதிபதி அவர்கள் உபவேந்தர், பதிவாளர் ஆகியோருக்கு கையளித்து அதன் பின் அனைவருக்கும் துண்டு பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.





















