வரலாற்று சிறப்புமிக்க ஏறாவூர் வடபத்திர காளியம்மன் ஆலய தீ மிதிப்பு நிகழ்வு!


(தீரன்)
வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு ஏறாவூர் நான்காம் குறிச்சி ஸ்ரீ வடபத்திர காளியம்மன் (ஏரூர் மாங்காட்டுக் காளியம்மன்) ஆலய வருடாந்த திருச்சடங்கின் தீ மிதிப்பு நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

கடந்த 13.07.2013 சனிக்கிழமை மடையெடுக்கும் வைபவத்துடன் ஆரம்பமாகிய அம்பாளின் திருச்சடங்கு நிகழ்வு கடந்த 21.07.2013 ஞாயிற்றுக்கிழமை காலை தீ மிதிப்பு நிறைவுபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விநாசகப்பானை எழுந்தருளப்பன்னும் நிகழ்வுடன் ஆரம்பமாகி தீ மூட்டப்பட்டு காலை 8.30 மணியளவில் தீ மிதிப்பு நிகழ்வு நடைபெற்றதுடன், தேவாதிகளினால் பக்தர்களுக்கு திருவாக்குச் சொல்லும் நிகழ்வு, சாட்டை அடிக்கும் நிகழ்வு ஆயுத பூசை, அம்மனுக்கு சக்கரையமுது படைத்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்று அன்னதான நிகழ்வுகளும் இடம்பெற்றன.