நீலாவணை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

(ச.சுரேந்திக்கா)  
மட்டக்களப்பு - பெரியநீலாவணை யில் தனது வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில்  ஆண் ஒருவரின் சடலம் நேற்று 11ம் திகதி பிற்பகல்  மீட்கப்பட்டுள்ளது.

இறந்தவர் செல்லத்துரை சிவராசா  36 வயதுடைய குடும்பஸ்தர் ஆவார். குடும்பப் பிரச்சினை காரணமாகவே இவர் தூக்கில் தொங்கியிர்க்லாம் என உறவினர்களின் தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.

இம் மரணம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பிரதேச பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.