(வி.சுகிர்தகுமார்)
இலங்கை சமுர்த்தி அதிகார சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டு மத்திய வங்கியினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குட்பட்ட 85 சமுர்த்தி உதவி முகாமையாளர்களுக்கான நுண்நிதியியல் தொடர்பான பயிற்சி நெறி கண்டி நில்லம்புவ பயிற்சி நிலையத்தில் கடந்த 10ஆம் திகதி ஆரம்பமாகி 15ஆம் திகதி நடைபெற்ற பரீட்சையுடன் நிறைவு பெற்றது.
இப்பயிற்சி நெறியானது சமுர்த்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி அவர்கள் தலைமையில் நடைபெற்றதுடன் , இப் பயிற்சி நெறியில் கலந்து கொண்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகள் அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.












