சற்று முன்னர் கல்லடி பாலத்தில் ஏற்பட்ட வீதி விபத்து.

(உ.உதயகாந்த் )         மட்டக்களப்பு புதிய கல்லடி பாலத்தில் 2013.07.05 திகதி மாலை 6.00 மணியளவில் முச்சக்கர வண்டியும் மோட்டார் வண்டியும் மோதுண்டு ஏற்பட்ட வீதி விபத்தில் கல்லடியைச் சேர்ந்த முச்சக்கர வண்டியின் சாரதியும் மோட்டார் வண்டியில் பிரயாணம் மேற்கொண்ட நபரும் பலத்த காயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இரு வாகணங்களும் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளன.

இவ் விபத்து தொடர்பான விசாரனைகளை மட்டக்களப்பு  போக்குவரத்து பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.