கல்முனை விளையாட்டு கழகத்தின் MRC கிண்ண கிறிக்கட் போட்டி

அண்மையில் கல்முனை விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் MRC  கிண்ணத்துக்கான மென் பந்து கிரிக்கட் போட்டியின் இறுதி போட்டி கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. இதில் சாய்ந்தமருது பிளையிங் கோர்சேஸ் அணிக்கும் ஒலுவில் எவர் ப்ரைட் அணிக்கும் நடை பெற்றது. இதில் சாய்ந்தமருது பிளையிங் கோர்சேஸ் அணி அணி சம்பியனானது.


இவ் இறுதி போட்டியில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் அவர்களும், விசேட அதிதிகளாக கிழக்குமாகாண சபை உறுப்பினர்களான இராஜேஸ்வரன் அவர்களும் கலையரசன் அவர்களும், சிறப்பு அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஜெயக்குமார் மற்றும் விஜயரெட்னம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.